புதிரான உலகம்...Puthir.Com

மேக்கப்புடன் தூக்கம் – ஹாலிவுட் மாடலின் விநோத பழக்கம்!

0 27

மேக்கப் பேட்டுக் கொள்வதால் தான் தினமும் அடைந்து வரும் சிரமத்தை பிரபல ஹாலிவுட் மாடல் பெல்லா ஹாடிட் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் திரையுலகில் புகழ் பெற்ற மாடலாகத் திகழ்பவர் பெல்லா ஹாடிட். நடிகையாக சில தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றியிருக்கும் இவர், பல மியூசிக் விடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.

பெல்லா ஹாடிட்டுக்கு மேக்கப்பை களைக்காமல் இரவில் தூங்கும் விநோத பழக்கம் உள்ளதாம். இதனால் நடு இரவில் விழத்துக்கொண்டு மேக்கப்புடன் இருக்கும் முகத்தை கழுவிய பின் தூங்கவதை வழக்கமாகக் கொண்டுள்ளாராம். இதுகுறித்து அவர் கூறியிதாவது:

சில நேரங்களில் மேக்கப் போட்டிருப்பதை உணராமல் தூங்கிவிடுவேன். இதன் பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு மேல் எழுந்த பார்த்த பின் மேக்கப்போடு இருப்பதைக் கண்டு குற்றவாளி போல் உணர்வேன்.

இதனைத் தொடர்ந்து முகத்தைக் கழுவி, ஈரப்படுத்தியபின் மீண்டும் படுக்கைக்கு செல்வேன். மேக்கப் முகத்தில் இருந்தவாறே காலையில் எழுவது என்பது மிகவும் கொடூரமான விஷயம்.

எனது முகம் எப்போதும் உலர்ந்தவாரே காணப்படும். அதனால் நான் அதனை ஈரப்படுத்திக்கொண்டே இருப்பேன். இதற்காக ஜெல்லியால் ஆன மாஸ்கை அணிவேன் என்று கூறினார்.