புதிரான உலகம்...Puthir.Com

வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண்! உரிமையாளர் மகன் வெறிச்செயல்! அம்மாடியோவ்!

0 21

ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண்ணை ஏஜென்ட் ஒருவர் சவுதி அரேபியா நாட்டில் அழகு நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி வீட்டு வேலைக்கு சேர்த்துவிட்டு ஏமாற்றியுள்ளார்.

வேறுவழி இல்லாமல் வீட்டு வேலையை பார்த்து வந்திருக்கிறார் அந்த இளம்பெண். இந்நிலையில் அந்த வீட்டு உரிமையாளரின் மகன், அந்த இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறான்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், தன்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்ததை எண்ணி வருந்தியிருக்கிறார். இதற்கிடையே அந்த காமூகன் இளம்பெண்ணை அவனது தாய் இருக்கும்போதே ரூமிற்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்திருக்கிறான்.

வேலைக்காக வந்த பெண்ணை நாசம் செய்தான் அந்த காம கொடூரன். கடந்த 4 ஆண்டுகளாக அந்த இளம்பெண்ணை வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறான்.

கடந்த 2014ம் ஜுலை மாதம் ஏஜென்டால் ஏமாற்றப்பட்ட இளம்பெண் ஒருவர் உதவியை நாடுவதாக எம்பிடி தலைவர் அம்ஜெத்துல்லா கான் தெரிவித்துள்ளார். அப்பெண்ணை பத்திரமாக கொண்டு வர உதவுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ரியாத்தில் வீட்டு வேலை செய்து வந்த இளம்பெண் வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமல் தப்பியோடி வந்துவிட்டதாகவும், அவர்களது கண்ணில் சிக்காமல் பாதுகாப்பாக இந்திய தூதரகத்திற்கு சென்றுவிட வேண்டும் எனவும் அந்த பெண் போராடி வருவதாக கூறியுள்ளார்.

இதுபோன்று பெண்களை ஏமாற்றி வேலை வாங்கி தருவதாக கூறி இந்தியாவின் ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களில் ஆட்கடத்தல் சம்பவம் நிகழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த பெண் மட்டுமல்லாது, ஹைதராபாத்தைச் சேர்ந்த மேலும் 2 பெண்கள் வீட்டு வேலை செய்யும் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.