புதிரான உலகம்...Puthir.Com

உயிருக்கு போராடும் நோயாளி – குஷியில் குத்தாட்டம் போட்ட நர்ஸ்கள்!

0 64

நோயாளி மயக்க நிலையில் இருந்தப்போது அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலாம்பியாவின் போலிவார் பகுதியில் சாந்தா குருஸ் டி போகாகிராண்டே என்ற மருத்துவமனை உள்ளது. அண்மையில் இங்கு நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் நோயாளி மயக்க நிலையில் இருந்தப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் செவிலியர்கள் மற்றும் உடன் இருந்த மருத்துவர்கள் சிரித்துக் கொண்டே ஆட்டம் போட்டுள்ளனர்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராக பரவியதை அடுத்து 5 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.