புதிரான உலகம்...Puthir.Com

சிறுபெண்களின் பிறப்பு உறுப்பை தைக்கும் வினோதம்!

0 25

சோமாலியா நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள், தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளின் பிறப்பு உறுப்பை சிறுவயதிலேயே தைக்கும் பழக்கத்தை காலம் காலமாக கடைபிடிக்கின்றனர். மேலும், இந்த கொடிய செயலை, பல ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிப்பதாக கூறுகின்றனர்.

பெண்களின் கற்பைக் காப்பாற்றி கொள்வதற்காக மதத்தின் பெயரால் நடத்தப்படும் இந்த அறுவை சிகிச்சையால் அதிகமான இரத்தம் வெளியாவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும். இதனால், அச்சிறுபெண்கள், அனுபவிக்கும் துயரம் கொடுமையானது.

தைக்கப்பட்ட பிறப்பு உறுப்பில் உள்ள சிறிய துவாரத்தின் மூலமாக மட்டுமே, சிறுநீர் மற்றும் மாதவிடாய் உதிரம் போன்றவைகளை வெளியேற்றி கொள்ள முடியும். இந்த அறுவை சிகிச்சையில், 5ல் 2 சிறுமிகள் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர். இதனை எதிர்த்து பல்வேறு மனிதநேய அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர்.