புதிரான உலகம்...Puthir.Com

அலுப்புத்தட்டும் அலுவலகப் பணிகள்; மனம் அமைதி பெற; 5 நிமிடம் நடைப்பயிற்சி

0 16

அலுவலகத்திற்கு போய் இருக்கையில் அமர்ந்து விட்டால், தொடர்ச்சியான வேலைகள், மூளைக்கு அதிகமான டென்ஷன்கள், மனச்சோர்வுகள் எல்லாம் நமக்கு ஏற்படும்.

ஆனாலும், இதற்கு மத்தியிலேயே நாம் வேலை பார்த்துக் கொண்டே இருப்போம். நமக்கு இருந்த இடத்திலேயே எல்லாம் வந்துவிடும். நாம் எழுந்து எதையும் போய் எடுக்க வேண்டாம். இது தான் மிகப்பெரிய ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரே இடத்தில் உட்கார்ந்து நாம் நம்முடைய சிந்தனைகளையும், உடலையும் இயக்கும் போது, மற்ற உறுப்புக்கள் எல்லாம் செயல்படால் இருப்பதால், நமக்கு அதிக டென்ஷனும், கவலையும் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

அதற்கு தான் மருத்துவர்கள் எளிய வழிமுறைகளை கூறுகின்றனர். அதாவது, நமக்கு என்ன தான் வேலைகள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு பிறகு, எழுந்து நிற்பது மற்றும் நடைப்பயிற்சி செய்யும் பொழுது, உங்களுடைய பழைய அலுப்புகள் எல்லாம் மறைந்து விடுகின்றதாம்.

உடலுக்கு புத்துணர்வும், இரத்தம் சுறுசுறுப்பாகவும் மாறுகின்றதாம். இதனால், ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள், லிப்ட் போன்றவற்றை பயன்படுத்தாமல், சிறிய வேலைக்குக்குக்கூட நடந்து போய் வருவது, வாகனங்களை தவிர்த்துக் கொள்வது போன்றவைகளை கடைப்பிடித்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றார்கள்.