புதிரான உலகம்...Puthir.Com

கோடை காலத்தில் பெண்களுக்கு சுகம் தரும் ஆடைகள்!

0 42

கோடைக்காலத்தில் பெண்கள் அணிய வேண்டிய உடைகள் இதமானதாகவும், அதே சமயம் ஃபேஷனாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் உண்டு.

அதே வேளையில் கோடைக்காலத்திற்கு பருத்தி ஆடைகளே சிறந்தவைகளாக விளங்கும். உங்களை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும் ஆற்றலை பெற்றுள்ளதால், இந்திய பருத்தியானது உலகம் முழுவதும் பிரபலமாகும்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகையாக விளங்குகிறது காதி. அதனை சேலையாக, பாவாடையாக அணியலாம்.

ஆடைகள்
ஆடைகள்

கோடை காலங்களில் தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும். உடலை ஒட்டிய ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை கோடைக்காலத்தில் பெண்கள் தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.

 

சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். அதேபோல லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் கோடைக்காலத்திற்கு புகழ் பெற்றதாகும்.

ஆடைகள்
ஆடைகள்

அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.