புதிரான உலகம்...Puthir.Com

Facebookல் காதல் பண்றவங்க கண்டிப்பா இந்த வீடியோவை பார்க்க வேண்டும் – நொந்துடுவீங்க

0 10

பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் உலகெங்கும் வாழும் நண்பர்களை தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்காக தொடங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் நண்பர்கள் ஆகத்தொடங்கி விட்டனர்.

முகம் பார்த்து பேசிய நட்புக்கள் மறைந்து முகப்புத்தக நட்புதான் இன்றைய டிரெண்ட். பிறந்தநாளுக்கு கூட நேரில் வாழ்த்து தெரிவித்தாலும் பேஸ்புக்கில் லைக் போட வில்லை என்று கவலைப்படுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

காதலும் இப்போது பேஸ்புக்கில் அதிகரித்து வருகிறது. பெண்களை நேரில் பாலோ செய்த காலம் போய் பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் பாலோ செய்கின்றனர். இதில் நிறைய அக்கவுண்ட்கள் போலி தான் என்பது பலருக்கும் புரிவதில்லை.

பெண்களின் பெயரில் அக்கவுண்ட் வைத்து நடிகர், நடிகைகள் போட்டோவை Profile Picture ஆக வைத்தால் கண்ணை மூடிக்கொண்டு ரெக்வஸ்ட் கொடுத்து சாட்டில் பேசி காதல் வளர்க்கின்றனர். சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்திக்கும்போது தான் இவர்களின் வண்டவாளம் தெரியும்.

இப்படி பேஸ்புக்கில் பேசி தங்கள் பணத்தையும், நேரத்தையும் பலர் இழந்திருக்கின்றனர். சிலர் தங்களது கற்பையும், உயிரையும் கூட இழந்திருக்கின்றனர்.

பேஸ்புக்கின் உண்மைநிலையை நகைச்சுவையாக இந்த முதியவர்கள் சொல்வதை இந்த காணொளியில் பாருங்கள்.