புதிரான உலகம்...Puthir.Com

மனைவியிடம் உதை வாங்கிய கணவர்

0 9

திடீர்ன்னு ராத்திரி இரண்டு மணிக்கு கணவனை எழுப்புறா மனைவி

மனைவி: அரண்மனை படத்தோட ஹீரோயின் யாருங்க?

கணவன் : ஹன்சிகா மோத்வானி, லக்ஷ்மி ராய், ஆண்ட்ரியா.

மனைவி : உங்க அம்மா என்னைக்கு இறந்து போனாங்க?

கணவன் : 2011வது வருஷம், திங்கட்கிழமை, அக்டோபர் 17ம் தேதி சாய்ந்திரம் மூணு மணிக்கு

மனைவி : நம்ம வீட்டுக்கு எதிர் வீட்டுல குடி வந்திருக்காளே கவிதா, அவ எப்போ குடி வந்தா?

கணவன் : போன புதன் கிழமையோட ரெண்டு மாசம் முடிஞ்சது,

ஆமா

எதுக்கு நடுராத்திரி எழுப்பி வச்சு இந்த கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்க?

மனைவி : இன்னைக்கு என்னோட பிறந்த நாள்.

“அமைதி”

“குண்டூசி விழுந்தா கூட சத்தம் கேட்குற அளவு அமைதி”

இனி என்ன நடந்து இருக்கணும்ன்னு சொல்லணுமா?

ஸ்டார்ட் ம்யூசிக்! செத்தாண்டா சேகரு!