புதிரான உலகம்...Puthir.Com

தற்கொலைக்கு முன் மருத்துவ கல்லூரி மாணவிகள் எழுதிய பரபரப்பு கடிதம்

0 11

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த மாணவிகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவிகள் உடலை பரிசோதனை செய்ய சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர் .

கள்ளக்குறிச்சி சின்னசேலம் அடுத்த பங்காரம் பகுதியில் இயற்கை மருத்துவ யோகா கல்லூரி உள்ளது . இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாணவிகள் பல முறை புகார் அளித்துள்ளனர. மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை தெரிவித்த சில மாணவிகள் சிலருக்கு நெருக்கடிகள் வந்ததாக தெரிகிறது. .

கல்லூரியில் என்ன தான் பிரச்சனை ?

அரசு கோட்டாவில் சேர்க்கப்பட்டாலும் கல்லூரி நினைக்கும் கட்டணத்தையே வசூலித்து வந்தனர். ஒரே ஒரு நபர் தான் பாடம் படித்து பயிற்றுவிக்க இருந்துள்ளார் . இது வரை இங்கு படித்து முடித்து யாரும் சர்டிபிகேட் வாங்கியதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதால் கல்லூரியில் இருந்து விலகுவதாக கூறினாலும் கட்டிய இரண்டு லட்சம் பணம் திருப்பி கொடுக்கவில்லை . இதனால் மன உளச்சல் கொடுப்பதால் எதிர் காலம் வீணாகி விடும் என்பதால் இந்த மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மாணவிகள் தற்கொலை தொடர்பாக கல்லூரியில் போலீஸ் அதிகாரி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர் . இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது மாணவிகள் தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளனர். இந்த கடிதத்தில் கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு சிரமம் கொடுத்துள்ளனர் என்று கூறியிருக்கின்றனர். மற்ற விஷயங்கள் என்ன உள்ளது என்பதை இப்போது கூற முடியாது என்றார் .

இதற்கிடையில் தற்கொலைக்கு முன் மருத்துவ கல்லூரி மாணவிகள் எழுதிய பரபரப்பு கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

தற்கொலைக்கு முன் மருத்துவ கல்லூரி மாணவிகள் எழுதிய பரபரப்பு கடிதம்
தற்கொலைக்கு முன் மருத்துவ கல்லூரி மாணவிகள் எழுதிய பரபரப்பு கடிதம்
தற்கொலைக்கு முன் மருத்துவ கல்லூரி மாணவிகள் எழுதிய பரபரப்பு கடிதம்
தற்கொலைக்கு முன் மருத்துவ கல்லூரி மாணவிகள் எழுதிய பரபரப்பு கடிதம்