புதிரான உலகம்...Puthir.Com

பிறந்தநாள் ஷாப்பிங் சென்ற சிறுமி…. பிணமாக வீடு திரும்பிய சோகம்….நடந்தது என்ன?…

0 26

கனடா நாட்டில் தனது பிறந்த நாளை கொண்டாட ஷாப்பிங் சென்ற 16 வயது சிறுமி ஒருவர் சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியிம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் கொலம்பியா மாகாணத்தின் Kamloops என்ற நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார் Jennifer Gatey என்ற 16 வயது சிறுமி .

இவர் கடந்த சனிக்கிழமை தனது 17-வது பிறந்த நாளை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
இதற்காக வெள்ளிக்கிழமை மாலை தனக்கு பிடித்தமான ஆடைகளை வாங்குவதற்காக ஷாப்பிங் சென்றுள்ளார்.

அப்போது, சாலையில் சென்றக்கொண்டிருந்த சிறுமி வேகமாக வந்த ஒரு வாகனம் பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

சாலையில் பலத்த சத்தம் கேட்டதை அறிந்த ஒரு நபர் வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது சாலை ஓரமாக அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாகவே சிறுமி பரிதாபமாக பலியானார்.

பிறந்த நாளை கொண்டாட சென்ற மகள் வீட்டிற்கு பிணமாக திரும்பியதை கண்டு பெற்றோர் மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பேசிய போலீஸார் ‘சிறுமி மீது மோதியது பற்றி தெரியவில்லை. ஆனால், வாகனத்தின் முன் பக்கம் சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த தகவலை வைத்து வாகன ஓட்டுனரை தேடி வருவதாகவும், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவர்கள் போலீஸாரை தொடர்புக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.