புதிரான உலகம்...Puthir.Com

15 வயதில் 66 வயது முதியவர் மூலம் 2 குழந்தைகள்: 12 வயதில் கடத்தப்பட்ட பெண்ணின் சோகம்! இதெல்லாம் எப்படி சாத்தியம்?

0 26

டெல்லியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடந்த 10 வருடத்திற்கு முன்னர் கடைக்கு செல்லும் போது கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடவைத்து, 15 வயதில் 66 வயது முதியவரை திருமணம் செய்த சோக நிகழ்வு தெரியவந்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தன்னுடைய 22 வயதில் வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார் அவர். தன்னுடைய கடந்த 10 ஆண்டுகால வாழ்க்கை குறித்து அவர் கூறியது:-

12 வயதில் கடத்திச் சென்றவர்கள் என்னை ரூ.300க்கு விற்றனர். அங்கு என்னோடு 20 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். பகல் முழுதும் கடுமையான வேலை, இரவில் பலபேர் வந்து வரிசையாக வல்லுறவுகொள்வார்கள். ஒருவேளை மட்டுமே உணவு கொடுத்தனர். இப்படி 12 மாதங்கள் செய்து வேறொருவரிடம் விற்றனர்.

இப்படி 9 இடங்களின் மாறி மாறி விற்கப்பட்டேன். 15 வயது எட்டிய பிறகு என்னை பஞ்சாப் கிராமத்தில் ஒரு போதைப்பழக்கம் உள்ள ட்ரக் ஓட்டுனருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். அவனோடு எனக்கு 2 குழந்தைகள் பிறந்தது. அவன் 2011 ல் இறந்துவிட்டான். அவனுடைய குடும்பத்தை சேர்ந்த சில உறவினர்களும் கட்டாயப்படுத்தி என்னுடன் உறவுக் கொண்டனர்.

கணவனுடைய சகோதரி, என் 2 குழந்தைகளையும் என் அனுமதி இல்லாமல் பறித்துக்கொண்டு என்னை வீட்டைவிட்டு துரத்திவிட்டாள். பின்னர் சாப்பாட்டு வழியில்லாமல் பிச்சை எடுத்தேன், சாலையில் உறங்கினேன்.

அப்போது ஒருவர் எனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மேற்கு வங்கத்திற்கு அழைத்து சென்று நடன விடுதியில் விற்றுவிட்டார். அங்கு டெல்லியை சேர்ந்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவரிடம் என வாழ்க்கையில் நடந்த துன்பங்களை சொன்னேன். அவர்தான் என்னை டெல்லிக்கு அழைத்து வந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.