புதிரான உலகம்...Puthir.Com

முதலில் இயக்குனர், பிறகு தொழிலதிபர், அடுத்து நடிகர்! இடையில் ஒரு காதல் வேறு – நடிகையின் திருமண வரலாறு!

0 33

இந்த நடிகை தனது தைரியமான நடிப்பு மற்றும் சிரிப்புக்கு பெயர் பெற்றவர். பிரபல நடிகரின் மகளான இவர் அந்த காலத்திலேயே லண்டன் சென்று படித்து வந்தவர்.

பின்னர் சினிமா துறையில் நுழைந்த நடிகை ஆரம்பத்தில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் பின்நாளில் முக்கிய நடிகையாக மாறினார்.

சினிமாவில், நுழைந்த சில வருடங்களில் இயக்குநரும் நடிகருமான ஒருவருடன் காதலில் விழுந்து, அவரை திருமணம் செய்துக்கொண்டார். சில வருடங்களில், அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் லண்டன் சென்ற நடிகை, அங்கு ஒரு பிரிட்டன் வாசியை திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கும், ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், அவரையும் விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் நாடு திரும்பினார். அந்த மகளுக்குத் தான்  சமீபத்தில் ஒரு கிரிக்கெட் வீரரை,  திருமணம் செய்துவைத்தார்.

இந்தியா திரும்பிய நடிகை, மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது உச்ச நடிகராக இருந்த தற்போதைய அரசியல் தலைவர் ஒருவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போகிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், அந்த தள்ளாட்ட நடிகர் தலைவரோ, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இதனால், மனமுடைந்த நாயகி சிறிது காலம் சினிமாவில் கவனம் செலுத்த, 2004ம் ஆண்டு மீண்டும் ஒரு நடிகரை திருமணம் செய்தார். தற்போது இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.

இவ்வாறாக, தற்போது அந்த நடிகை கடைசியாக திருமணம் செய்த நடிகருடன் தான் வாழ்ந்து வருகிறார். கேட்கும் போதே தலை சுற்றுகிறது.