புதிரான உலகம்...Puthir.Com

நடிகர் செந்தில் : திரையுலகில் இவருக்கு இன்னொரு முகம் இருக்கு :படிங்க அசந்து போவீங்க

0 19

என்னை விட திறமைசாலிங்க லட்சம் பேரு சுத்துறாங்க..ஆண்டவன் எனக்கு மட்டும் மட்டும் அதிர்ஷ்டம் கொடுத்திருக்கான்.

நகைச்சுவை நடிகர் செந்தில்அடிக்கடி  சொல்லும் வார்த்தை இது.

பொய் சாட்சியில் முதன் முதலாக அறிமுகமான செந்தில், தியாகராஜனின் மலையூர் மம்பட்டியான் படம் மூலம் பிரபலமானார்.

காமெடி கிங் கவுண்டமணியுடன் இவர் இணைந்து நடித்த அத்தனைப் படங்களிலும் நகைச்சுவை மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தொடர்ந்து ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். இவர் பற்றி யாரும் அறியாத சில விசயங்கள் உண்டு.

இவர் சினிமாவில் பிசியாக இருந்த காலகட்டத்தில் இவர் வீட்டு வாசல் முன்பு நலிந்த நாடகக் கலைஞர்கள், பசியில் வாடும் உதவி இயக்குனர்கள், பிள்ளைகளின் கல்விக்கு உதவி கேட்டு நிற்பவர்கள் என்று ஒரு கூட்டமே நிற்கும்.

யாரையும் முகம் சுளிக்கும்படி பேச மாட்டார். அனைவருக்கும் நிலை அறிந்து பணம் கொடுத்து அனுப்புவார்.

குறிப்பாக வசதி இல்லாத மாணவர்களுக்கு இவர் செய்த உதவிகள் மிக மிக அதிகம். ரொம்ப படிக்கணும்னு ஆசைப் பட்டேன். ஆனா எங்க வீட்டுல வசதி இல்லை.

இப்போ எனக்கு வசதி இருக்கு. ஆனால் படிக்க முடியாது. நான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது என்பார்.

இவரிடம் உதவி பெற்று நல்லநிலையில் இருக்கும் மாணவர்களை அழைத்து விசாரிப்பார். அவர்களும் தாங்களாகவே  வந்து செந்திலைப் பார்த்து செல்வதும் உண்டு.

இன்னொரு விஷயம் இவர் ஒரு விவசாயி. இப்போது வரை கொஞ்சம் ஒய்வு கிடைத்தாலும் தனது கிராமத்திற்கு சென்று விடுவார்.

இயற்கை விவசாயம் செய்ய வயலில்  இறங்கி விடுவார். விவசாயம் வாழணும்னா விவசாயி குடும்பம் சந்தோசமா இருக்கும் என்பது இவரின் தாரக மந்திரம்.

கவுண்டர் சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியதும், செந்திலுக்கும் கட்டாய ஓய்வு ஏற்பட்டது.

அவர்கள் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் தொலைக்காட்சிகளில் இன்றும் ஒளிபரப்பபடுகிறது . இன்று அரசியலில் பிசியாகி விட்டார்.

அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வருகிறார். இந்த நல்ல மனிதனை வாழ்த்தலாமே..!