புதிரான உலகம்...Puthir.Com

உயிரை காவு வாங்கும் பைக் மோகம்! ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்…

0 26

வாகனம் என்பது இன்று மக்களின் அடிப்படைவசதியான பொருளாக மாறி விட்டது.

அதனால் பல நன்மைகள் இருப்பினும், அதில் உள்ள தீமைகளையும் நாம் மறுக்கவே இயலாது.

இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு ஸ்கூட்டர், பைக்குகளை ஓட்டி செல்வதை மிகவும் சாதாரணமாக காண முடிகிறது!

இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களே! நிச்சயம் இவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இருக்காது.

இதில் பலர் விபத்துக்குள்ளாகிறார்கள் என்பது தான் அதிர்ச்சியான செய்தி, இந்த தவறில் பெரும் பங்கு பெற்றோர்களுக்கும் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதனால் பெற்றோர்கள் தங்களின்  குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.